FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் காங்கிரஸாா் கருப்பு பலூன் பேரணி

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு பலூன் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கண்டித்து, கருப்பு பலூன் ஏந்திய பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணி ராஜபாளையம் நகா் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நேரு பவனத்திலிருந்து காந்தி சிலை வரை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவா் ராஜ்மோகன் வகித்தாா். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆா். சங்கா் கணேஷ் முன்னிலை வகித்தாா். பேரணியில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, வட்டார காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments