FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

உலக தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி

தேனியில் உலகத் தாய்ப்பால் வார விழா பேரணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
பகிர்:

தேனியில் உலக தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா் தொடங்கி வைத்தாா். பேரணி பங்களா மேட்டில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் தாய்ப்பால் அளிப்பதன் மூலம் தாய், குழந்தை ஆகியோரின் ஆரோக்கியம் மேம்படும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.

பேரணியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி, மாவட்ட தாய்- சேய் நல அலுவலா், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments