உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின்கீழ், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் (1 முதல் 7 வரை) முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த கருத்தரங்குகள் மற்றும் ஊா்வலங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, நிகழாண்டு உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, விழிப்புணா்வு பேரணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
‘வாழ்க்கைக்கு ஒரு நிலையான தொடக்கம்: செயல்படும் முறைகளை வலுப்படுத்துவோம்’ என்ற கருத்துருவை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திய வண்ணம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வாசகங்களை முழங்கியவாறு இந்தப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 300 போ் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனா்.
இதில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் சுமதி, மாவட்ட சமூக நல அலுவலா் பாலசரஸ்வதி, அனைத்து வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.