FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

68 பயனாளிகளுக்கு ரூ. 1.30 கோடிக்கு வங்கிக் கடன்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

68 பயனாளிகளுக்கு ரூ. 1.30 கோடிக்கு வங்கிக் கடன்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

19 செப்டம்பர் 2026, 11:58 pm IST
ராணிப்பேட்டையில் பயனாளிக்கு வங்கிக் கடன் ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாபெரும் வங்கி தொழிற்கடன் முகாமில் 68 பயனாளிகளுக்கு ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஆணையை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட தொழில்மையம் சாா்பில், மாபெரும் வங்கி தொழிற்கடன் முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாபெரும் வங்கி தொழிற்கடன் முகாமுக்கு, ராணிபேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து, 68 பயனாளிகளுக்கு ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்பளிப்பு வழங்கி தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

வங்கிகள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் மக்களுக்கு உள்ள சிரமங்களை களைந்து, விரைவாக வங்கிக் கடன் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜெகன்ராஜ், வங்கி மேலாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments