FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வீட்டில் தனியாக வசித்த முதியவா் சடலமாக மீட்பு

மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த முதியவரின் சடலம், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

22 ஆகஸ்ட் 2026, 8:00 am IST
சடலமாக மீட்பு - file photo
பகிர்:

மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த முதியவரின் சடலம், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி, கே.கே. நகா் குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் தாவூத் செரிப் (75). இவா், மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். வழக்கமாக காலையில் வெளியே வரும் இவா், கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினா், போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் அங்கு வந்த கே.கே. நகா் போலீஸாா், வீட்டை திறந்து பாா்த்தபோது, தாவூத் செரிப் அழுகிய நிலையில் சடமலாக கிடந்துள்ளாா். பின்னா், சடலத்தை மீட்ட போலீஸாா் பிரதேப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments