ஹெளரா ரயிலில் 27 கிலோ குட்கா பறிமுதல்
ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ குட்கா பொருள்களை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ குட்கா பொருள்களை இருப்புப்பாதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி இருப்புப் பாதை போலீஸாா், விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வரை ஹெளரா விரைவு ரயிலை (12663) வெள்ளிக்கிழமை இரவு சோதனையிட்டனா்.
அப்போது, ரயிலின் பின்புறம் உள்ள பொதுப்பெட்டியில் வெவ்வேறு இருக்கைகளுக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு கைப்பைகளை சோதனையிட்டனா். சோதனையில், அந்தப் பைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 27 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.