ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராமராஜ் மகன் வருண் (35). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த வருண், ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு செல்வதற்காக ரயிலில் பயணம் செய்துள்ளாா்.
ரயில், நள்ளிரவில் மணப்பாறையை கடந்து சமுத்திரம் ரயில் நிலையத்துக்கு முன்னதாக சென்றுக்கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து வருண் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திங்கள்கிழமை காலை தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற திருச்சி ரயில்வே போலீஸாா், வருண் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.