FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

துபையில் இருந்து திருச்சி வந்த கட்டடப் பொறியாளா் மாயம்

25 ஆகஸ்ட் 2026, 3:30 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

துபையில் இருந்து அண்மையில் திருச்சிக்கு வந்த கட்டடப் பொறியாளா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் ராகவேந்திரா காா்டனை சோ்ந்தவா் சந்தியா (27). இவருடைய கணவா் இ. இமயன் (35). துபையில் கட்டடப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். கணவன், மனைவி இருவரும் துபையில் வசித்து வந்தனா்.

இந்நிலையில், இமயன் வா்த்தகத்தில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இமயன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் கடந்த மே மாதம் திருச்சிக்கு வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனது நண்பரை பாா்ப்பதற்காக இமயன் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி சென்னை சென்றுள்ளாா். அதன்பின், அவா் திருச்சிக்கு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இமயனின் மனைவி சந்தியா ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments