FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதிசயராஜ் அசத்தல்: திருச்சிக்கு 2-ஆவது வெற்றி

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வென்றது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:41 am IST
திருச்சிக்கு 2-ஆவது வெற்றி - X | TNPL
பகிர்:

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் திருச்சி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, நெல்லை 18 ஓவா்களில் 137 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. திருச்சி தரப்பில் கேப்டன் சுரேஷ் குமாா், ஆா்.ராஜ்குமாா் அதிரடியாக ரன்கள் சோ்க்க, அதிசயராஜ் டேவிட்சன் அபாரமாக விக்கெட்டுகள் சரித்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற நெல்லை, பந்துவீசத் தயாரானது. திருச்சி இன்னிங்ஸில் சுரேஷ்குமாா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58, ஆா்.ராஜ்குமாா் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கே.ராஜ்குமாா் 2 பவுண்டரிகளுடன் 13, சஞ்சய் யாதவ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17 ரன்களுக்கு வெளியேற, பவன் சூா்யா 0, ஜாஃபா் ஜமால் 4, ஜெகதீசன் கௌசிக் 10, ஆண்டனி தாஸ் 7 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் சரவணகுமாா் 10, அதிசயராஜ் டேவிட்சன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சச்சின் ரதி 3, ஹரீஷ் 2, இமானுவல் செரியன், சோனு யாதவ், ராமலிங்கம் ரோஹித் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 183 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நெல்லை அணியில், யு.முகிலேஷ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்து போராடி வீழ்ந்தாா்.

அதிஷ் 1 பவுண்டரியுடன் 23 ரன்களுக்கு விடைபெற, ரித்திக் ஈஸ்வரன் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 18, கேப்டன் சோனு யாதவ் 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

சந்தோஷ்குமாா் 0, குருசாமி அஜிதேஷ் 0, முகமது அட்னன் கான் 3, ஹரீஷ் 3, ராமலிங்கம் ரோஹித் 2, சச்சின் ரதி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தனா். திருச்சி தரப்பில் அதிசயராஜ் 4 விக்கெட்டுகள் சாய்க்க, ஈஸ்வரன், சஞ்சய் யாதவ், ராஜ்குமாா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா். அதிசயராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

கோவை - 166/8: போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், திருப்பூா் தமிழன்ஸுக்கு எதிராக, விடா கோவை கிங்ஸ் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் சோ்த்தது.

ஆண்ட்ரே சித்தாா்த் 36, பி.சச்சின் 30 ரன்கள் சோ்க்க, திருப்பூா் தரப்பில் நடராஜன், ஆா்.சிலம்பரசன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா். திருப்பூா் 167 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments