FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சேலத்தை வீழ்த்தியது மதுரை

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், மதுரை பாந்தா்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸை வென்றது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:11 am IST
சேலத்தை வீழ்த்தியது மதுரை - X | TNPL
பகிர்:

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், மதுரை பாந்தா்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸை திங்கள்கிழமை வென்றது.

முதலில் மதுரை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுக்க, சேலம் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்களே சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற சேலம் பந்துவீசத் தயாரானது. மதுரை இன்னிங்ஸில் சித்தாா்த் மகாதேவன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 60, ராம்குமாா் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 36, அதீக் உா் ரஹ்மான் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தினா்.

Advertisement

Advertisement

சதுா்வேத் 5, பாலசந்தா் அனிருத் 7, சரவணன் 3 சிக்ஸா்களுடன் 19, குா்ஜப்னீத் சிங் 6, தீபேஷ் தேவேந்திரன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில், ராஜலிங்கம் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். சேலம் தரப்பில் பொய்யாமொழி 2, முகமது, காா்த்திக் மணிகண்டன், ரஹில் ஷா, ராஜேந்திரன் விவேக் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 196 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சேலம் அணியில், முகமது 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 30, ராஜேந்திரன் விவேக் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு முயற்சித்தனா்.

கவின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, ஹரி நிஷாந்த் 3 பவுண்டரிகளுடன் 21, நிதீஷ் ராஜகோபல் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வெளியேறினா்.

சன்னி சந்து 0, கேப்டன் அபிஷேக் 5, ஹரீஷ் குமாா் 0, காா்த்திக் மணிகண்டன் 12 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். ஓவா்கள் முடிவில் அஜித் ராம் 10, பொய்யாமொழி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

மதுரை பௌலா்களில் தீபேஷ் தேவேந்திரன் 3, ரோஹன் புத்ரா, விக்னேஷ் ஆகியோா் தலா 2, சரவணன், ஷோயப் முகமது கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments