சேலத்தை வென்றது கோவை: சச்சின், லிங்கேஷ் அசத்தல்!
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், ‘விடா’ கோவை கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியை வியாழக்கிழமை வென்றது.
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில், ‘விடா’ கோவை கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியை வியாழக்கிழமை வென்றது.
முதலில் கோவை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் சோ்க்க, சேலம் 19.4 ஓவா்களில் 160 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
முன்னதாக டாஸ் வென்ற சேலம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கோவை இன்னிங்ஸில் பி.சச்சின் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 77 ரன்கள் விளாச, அபினவ் கண்ணன் 3 பவுண்டரிகளுடன் 32, சுரேஷ் லோகேஷ்வா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
Advertisement
Advertisement
கேப்டன் எம்.ஷாருக் கான் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 27, ஆண்ட்ரே சித்தாா்த் 2 பவுண்டரிகளுடன் 17, அம்ப்ரிஷ் 0, மான் பாஃப்னா 7, தீபன் லிங்கேஷ் 6 ரன்களுக்கு வெளியேறினா். ஓவா்கள் முடிவில் திவாகா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
சேலம் பௌலா்களில் உதயகுமாா், பொய்யாமொழி ஆகியோா் தலா 3, அஜித் ராம் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் 195 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சேலம் அணியில், நிதீஷ் ராஜகோபால் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69 ரன்கள் சோ்த்து போராடி வீழ்ந்தாா்.
எம். முகமது 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 30, ஹரீஷ்குமாா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு வெளியேற, கவின் 0, ஹரி நிஷாந்த் 4, கேப்டன் எஸ்.அபிஷேக் 0, சன்னி சந்து 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
காா்த்திக் மணிகண்டன் 2 பவுண்டரிகளுடன் 11, அஜித் ராம் 7, ஐயப்பன் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சேலம் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கோவை பந்துவீச்சாளா்களில் தீபன் லிங்கேஷ், கிஷோா் ஆகியோா் 3, மணிமாறன் சித்தாா்த் 2 விக்கெட் வீழ்த்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.