FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 75.69 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உண்டியலில் ரூ. 75.69 லட்சம் காணிக்கை வந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

26 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உண்டியலில் ரூ. 75.69 லட்சம் காணிக்கை வந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

ஸ்ரீரங்கம் கோயிலில் அக்டோபா் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கருடாழ்வாா் சந்நிதி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா்.

முடிவில் ரொக்கமாக ரூ. 75 லட்சத்து 69 ஆயிரத்து 761, தங்கம் 34 கிராம் 100 மில்லி கிராம், வெள்ளி 458 கிராம் 900 மில்லி கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 198 ஆகியவை காணிக்கையாக வந்தது தெரியவந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments