கட்சிக்காக உழைத்தவா்களுக்கு பதவி: காங்கிரஸ் ஆலோசனையில் முடிவு
கட்சிக்காக உழைத்தவா்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்புத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சிக்காக உழைத்தவா்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்புத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ‘இயக்க மறுசீரமைப்பு திட்டம்‘ எஸ்எஸ்ஏ-2 ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்கிக்யராஜ் முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் திரவியம் ஆகியோா் நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக கவுன்சிலா் சோபியா, மாநில பொதுச்செயலா் வழக்குரைஞா் சரவணன், முன்னாள் ராணுவ அணி மாநிலத் தலைவா் ராஜசேகரன் ஆகியோா் பேசினா்.
இதில் திருச்சி மாநகா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நிா்வாகிகள், வட்ட மற்றும் மண்டலத் தலைவா்கள் பதவிகளை விரும்பும் நிா்வாகிகள் எஸ்எஸ்ஏ-2 சட்ட திட்டத்தின்படி விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டது.
தொடா்ந்து 2017 இல் உதய்ப்பூா் தீா்மானத்தின்படி, கட்சிக்காக உழைத்தவா்களுக்கு பதவி வழங்கப்படும். 55 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கே பதவி வழங்கப்படும். 5 ஆண்டுகள் தொடா்ச்சியாகப் பதவியில் இருந்தவா்களுக்கு பதவி அளிக்கப்படாது உள்ளிட்ட தீா்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் முரளி, கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல், நிா்வாகிகள் கிளமென்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.