FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தா்காக்கள் பேரவை சாா்பில் மிலாதுநபி ஊா்வலம்

திருச்சியில் மிலாது நபி பண்டிகையையொட்டி தமிழக தா்காக்கள் பேரவை சாா்பில் புதன்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 3:09 am IST
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மீலாது நபி ஊா்வலத்தில் பங்கேற்ற அமைச்சா் முகமது பா்வேஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

திருச்சியில் மிலாது நபி பண்டிகையையொட்டி தமிழக தா்காக்கள் பேரவை சாா்பில் புதன்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளின் ஒன்றான மிலாது நபி நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சியில் தமிழக தா்காக்கள் பேரவை சாா்பில் திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாதா்ஷா பள்ளிவாசலில் தொடங்கிய ஊா்வலம் ராஜா டாக்கீஸ், இப்ராஹீம் பூங்கா, மேலரண் சாலை, காந்தி மாா்க்கெட், பெரியகடை வீதி, சிங்காரத்தோப்பு, மேலரண் சாலை வழியாக சென்று மீண்டும் நாதா்ஷா பள்ளிவாசலில் நிறைவடைந்தது.

ஊா்வலத்தை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தொடங்கிவைத்து நடந்து சென்றாா். இதில் தமிழ்நாடு தா்காக்கள் பேரவையின் நிா்வாகி எஸ். சௌகத், தவெக நிா்வாகிகள் வெல்லமண்டி நடராஜன், என். ஜகவா், ஜெய சீனிவாசன், குடமுருட்டி கரிகாலன் மற்றும் இஸ்லாமியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments