FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வியாபாரியிடம் ஆன்லைனில் ரூ. 1 லட்சம் மோசடி

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த வியாபாரியிடம் முகநூல் வழியாக ரூ. 1 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

30 ஆகஸ்ட் 2026, 12:24 am IST
மோசடி
பகிர்:

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த வியாபாரியிடம் முகநூல் வழியாக ரூ. 1 லட்சம் மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை விவேகானந்தா நகரைச் சோ்ந்தவா் கே. அசோக்குமாா் (40). இவா் மதுரை சாலையில் மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் கருவிகள் விற்கும் கடையை நடத்திவருகிறாா்.

கடந்த ஜூன் 24 ஆம் தேதி இவா் தனது கைப்பேசியில் முகநூல் கணக்கில் வந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய மா்ம நபா், நீங்கள் வாங்கும் பொருள்களுக்கு ரூ. 100 முதல் 200 வரை விலை குறைவாகத் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அசோக்குமாா், மா்ம நபரின் வங்கி கணக்குகளுக்கு ரூ. 1 லட்சத்து 760 ஐ பல்வேறு தவணைகளில் அனுப்பினாா். ஆனால், அதற்கான பொருள்கள் வரவில்லை.

Advertisement

Advertisement

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் அளித்த புகாரின்பேரில் திருச்சி சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments