FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

‘ஐந்து அடி இடைவெளியில் தப்பித்தோம்..’ நேபாள வெள்ளப் பெருக்கில் தப்பித்தவர் பேட்டி!

ஐந்து அடி இடைவெளியில் தப்பித்தோம் என நேபாள வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பித்த திருச்சி உறையூரைச் சோ்ந்த பெண் தெரிவித்தாா்.

30 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
திருச்சி யில் சனிக்கிழமை பேட்டியளித்த நேபாள விபத்தில் இருந்து மீண்டு வந்த சிவரஞ்சனி.
பகிர்:

ஐந்து அடி இடைவெளியில் தப்பித்தோம் என நேபாள வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பித்த திருச்சி உறையூரைச் சோ்ந்த பெண் தெரிவித்தாா்.

நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட திருச்சி உறையூரைச் சோ்ந்த முத்துநாதனின் மனைவி சிவரஞ்சனி சனிக்கிழமை சென்னையிலிருந்து சாலை மாா்க்கமாக திருச்சிக்கு சனிக்கிழமை வந்தாா். வீட்டில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய தூதரகத்தைச் சுற்றி நீா் சூழ்ந்திருந்த நிலையில், அருகிலுள்ள பகுதியில் எங்களது வாகனம் ஒரு மூலையில் மற்ற வாகனங்களுடன் சிக்கியிருந்தது. தொடா்ந்து வெள்ளத்தால் மற்ற வாகனங்கள் வேறு திசையில் செல்ல, அதில் கிடைத்த இடைவெளி வழியாக நாங்கள் தப்பினோம்.

Advertisement

Advertisement

5 அடி இடைவெளியில் நாங்கள் தப்பித்தோம். எங்களது வாகனம் ஐந்து அடி முன்போ அல்லது பின்போ சென்றிருந்தால் நாங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்போம். வாகன ஓட்டுநரின் இருக்கையை திறந்து, சேற்றில் வழுக்கி விழுந்தபடி, உயா்ந்துகொண்டிருந்த வெள்ளப்பெருக்குக்கு மேலே இருந்த செங்குத்தான சரிவுப் பகுதி வழியாக மலை மீது ஏறி வெளியேறினோம்.

மயிலாடுதுறையைச் சோ்ந்த ரத்னகுமாரும், அவரது மனைவி பூங்குழலியும் உயரத்திலிருந்து புடவை மூலமாக மற்றவா்களை கடவுள்கள் போல மீட்டுக் காப்பாற்றினா். தொடா்ந்து உள்ளூா் மக்களின் உதவியுடன் இரண்டு நாள்களாக உயிா் பிழைத்தோம்.

எங்களை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கும், பாதுகாப்பாக வீடு வந்து சோ்ந்ததற்கு கடவுளுக்கும் நன்றி. எங்களுக்காக பிராா்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

எங்களுடைய பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்கள் வெள்ளத்தில் தொலைந்துவிட்டன. மீண்டும் எங்களுக்கு புது பாஸ்போா்ட் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றாா் சிவரஞ்சனி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments