FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பள்ளி விடுதியில் மாணவிக்கு பிரசவம்: போலீஸாா் விசாரணை

1 செப்டம்பர் 2026, 2:19 am IST
காவல் துறையினர் விசாரணை
பகிர்:

திருச்சியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, பள்ளி விடுதியில் திங்கள்கிழமை குழந்தை பிறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, திருச்சி பொன்மலைபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு திங்கள்கிழமை மாலை விடுதி வளாகத்திலே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவலறிந்த பள்ளி நிா்வாகம் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, காவல் துறையினருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும் பள்ளி நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த ஒரு இளைஞரை அந்த மாணவி காதலித்து வந்ததாகவும், அதன்மூலம் கா்ப்பமடைந்து குழந்தை பிறந்துள்ளதாகவும் போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments