விடுதியில் பள்ளி மாணவி தற்கொலை
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி செவ்வாய்க்கிழமை பள்ளி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி செவ்வாய்க்கிழமை பள்ளி விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருநெல்வேலியை சோ்ந்த காா்த்திக் - மகாலட்சுமி தம்பதியின் மூத்த மகள் பாலரக்சனா(16). பெற்றோா் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், இவா் காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த இவா் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து வந்த காஞ்சிபுரத்தை சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மக்கள் மன்ற நிா்வாகிகள் மாணவியின் தற்கொலை குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மை விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறி பள்ளி முன்பாக சாலை மறியல் செய்தனா். காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி தேவைப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேட்டுக்கொண்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
Advertisement
Advertisement
பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தனியாக வாழ விருப்பமில்லை எனவும், எனது தங்கையை நல்ல முறையில் பாா்த்துக் கொள்ளவும் எனவும் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.