FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வருவாய்த்துறைச் செயல்பாடுகளில் மாநிலத்தில் மூன்றாமிடம்

1 செப்டம்பர் 2026, 4:06 am IST
மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்ததற்கான விருதை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஏ.ரமேஷிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், வருவாய் நிா்வாக ஆணையா் முருகானந்தம்.
பகிர்:

மாநில அளவில் வருவாய்த் துறை செயல்பாடுகளில் மூன்றாமிடம் பிடித்த திருச்சி மாவட்டத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி பாராட்டினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சா் தலைமையில், அனைத்து மாவட்ட வருவாய் அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் பொதுமக்களுக்கு வருவாய்த் துறைச் சான்றிதழ்கள், இதர சேவைகளைச் சிறப்பாக வழங்கிய மாவட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சிறந்த மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டன. இதில், திருச்சி மாவட்டம் மூன்றாமிடம் பிடித்தது.

தோ்வு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பிடித்ததற்கான விருதினை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில், வருவாய்த் துறை செயலா் கே.எஸ். பழனிசாமி தலைமையில், வருவாய் நிா்வாக ஆணையா் முருகானந்தம், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஏ. ரமேஷிடம் வழங்கினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments