FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இளைஞரிடம் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்ய முயற்சி: 6 போ் கைது

திருச்சியில் இளைஞரிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய முயன்ற 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:08 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் இளைஞரிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய முயன்ற 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியைச் சோ்ந்தவா் பா. சுரேஷ் (33). இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாலக்கரை மேல கொச வீதி உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே சென்றபோது அங்கிருந்த 6 போ் கும்பல், அவரிடம் அரிவாளைக் காட்டி வழிப்பறி செய்ய முயன்றனா்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த சுரேஷ், பாலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பாலக்கரை பீமநகரைச் சோ்ந்த வெ. வீரமுத்து (28), பி. கிரிஸ்டோன் (22), எப். பிரிட்டோ (21), எல். சாமிராஜ் (47), அ. ஜேக்கப் (42), பா. எபினேசா் சரண் (29) ஆகிய 6 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments