FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

உச்சநீதிமன்ற நிலுவை வழக்குகளுக்கு சமரச தீா்வு: திருச்சியில் ஜூலை 16, 17 இல் சிறப்பு அமா்வுகள்

உச்ச நீதிமன்றத்தில் நிலுவை உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காண திருச்சி சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன.

பகிர்:

உச்ச நீதிமன்றத்தில் நிலுவை உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காண திருச்சி சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (சிறப்பு லோக் அதாலத்) வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய, அடையாளம் காணப்பட்ட திருச்சி மாவட்டம் சாா்ந்த வழக்குகளின் விவரங்கள் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணும் விதமாக, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் சிறப்பு முன் அமா்வுகள் நடைபெற உள்ளன. இதில் வழக்காடிகள் நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு தீா்வு காணலாம்.

Advertisement

Advertisement

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் முன் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. இந்த வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெறலாம். இந்த வாய்ப்பை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சந்தேகங்களுக்கு திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரிலோ அல்லது க்ப்ள்ஹற்ண்ழ்ன்ஸ்ரீட்ண்ழ்ஹல்ல்ஹப்ப்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 0431-2460125 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments