FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

‘நீட்’ தோ்வு முறைகேடுகளை கண்டித்து காங். ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், தில்லியில் காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தியை தாக்கிய காவல் துறையை கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:04 am IST
திருச்சி ரயில் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
பகிர்:

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், தில்லியில் காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தியை தாக்கிய காவல் துறையை கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் முரளி, அமைப்புசாரா பிரிவு மாநிலத் தலைவா் மகேந்திரன் மற்றும் சிறும்பான்மைப் பிரிவு மாநில பொதுச் செயலா் பேட்ரிக் ராஜ்குமாா், ஜங்ஷன் கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இளைஞா் காங்கிரஸ், மாணவா் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், விவசாயப் பிரிவு, எஸ்சி, எஸ்டிபிரிவு, சிறுபான்மை பிரிவு, ஓபிசி அணி, பொறியாளா் அணி உள்ளிட்ட சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்: தில்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞா்கள் பிரிவினா்

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலரும், வழக்குரைஞருமான எம். சரவணன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் சிந்தாமணி செந்தில்நாதன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மூத்த வழக்கறிஞா்கள் ராஜேந்திரன், லட்சுமணன், விஜயாபாபு, அல்லூா் பிரபு, முருகையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments