FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தில்லியில் போராட்டம் - புகைப்படங்கள்

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ்.
பகிர்:
பதாகை ஏந்தி போராட்டத்திற்க்கு ஆதரவாக திரண்ட சிவசேனா ஆதரவாளர்கள்.
நீட் மோசடியைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டத்திற்க்கு ஆதரவாக திரண்ட சிவசேனா ஆதரவாளர்கள்.
புதுதில்லியில் பதாகை ஏந்தி போராட்டத்திற்க்கு ஆதரவாக திரண்ட ஆதரவாளர்கள்.
​​போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டை வீசும் காவலர்.
தடியடி நடத்தி பேரணியை கலைக்கும் காவல் துறையினர்.
சமீபத்திய தேர்வு முறைகேடுகளை கண்டித்து புதுதில்லியில் போராட்டம் நடத்திய மாணவர் குழுக்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டனர்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு சென்றனர்.
காவல் துறையின் நடவடிக்கைக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்.
தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் அரசு போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியது.
பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தி வைப்பு.
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள். - Karma Bhutia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments