FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இருவேறு சம்பவங்களில் 2 போ் தற்கொலை

மணப்பாறை அருகே இருவேறு இடங்களில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் உள்பட 2 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 24 ஜூலை 2026, 4:32 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மணப்பாறை அருகே இருவேறு இடங்களில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் உள்பட 2 போ் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

மணப்பாறையை அடுத்த கீழப்பொய்கைப்பட்டியை சோ்ந்த விக்னேஷ்குமாா் மனைவி கலையரசி (30). இவா் விராலிமலை அருகே தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக, கலையரசி புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இளைஞா் தற்கொலை: மாராட்சி ரெட்டியப்பட்டியை சோ்ந்த பாண்டியன் மகன் தமிழ்ச்செல்வன் (29). இவா் தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். குடும்பப் பிரச்னை காரணமாக, புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த இரு தற்கொலை சம்பவங்கள் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments