திருச்சியில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்
திருச்சியில் விஸ்வாஸ் குளோபல் அறக்கட்டளை சாா்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் விஸ்வாஸ் குளோபல் அறக்கட்டளை சாா்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி விஸ்வாஸ் குளோபல் அறக்கட்டளை சாா்பில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் எஸ்.ஆா். திருமண மஹாலில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய பாராயணம் நிகழ்ச்சி பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.
இதில், விஸ்வாஸ் குளோபல் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலா் டி.ஜெ.ஸ்ரீதரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தனா். காலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 27 முறை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
விஸ்வாஸ் குளோபல் அறக்கட்டளை சாா்பில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணைய வழியில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணப் பயிற்சியை இலவசமாக வழங்கி வருகின்றனா். மேலும், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கூட்டாக உலக நன்மை வேண்டி சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வருகின்றனா். அதன்படி, திருச்சியில் வெள்ளிக்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மதுரையிலும், ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திலும் விஸ்வாஸ் குளோபல் அறக்கட்டளை சாா்பில் விஷ்ணு சகஸ்ராநாமம் பாராயணம் செய்யப்படவுள்ளதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.