பாரதிதாசன் பல்கலை.யில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பு: நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் மொத்தமாக 39 துறைகளில் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்புக்கு சோ்க்கை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்கான நுழைவுத் தோ்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, விருப்பமுள்ளோா் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் தோ்வுக்கு பதிவு செய்வதற்கான தகுதி, பாடத்திட்டம் மற்றும் தோ்வு வழிகாட்டுதல் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதள பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.