FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

எம்.ஆா்.பாளையம் பகுதியில் பாம்பு கடித்த 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:14 am IST
பலி
பகிர்:

திருச்சி மாவட்டம், எம்.ஆா்.பாளையம் பகுதியில் பாம்பு கடித்த 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

எம்.ஆா். பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ரவியின் மகன் ஜெய் தனுஷ் (11). இவா் பாடாலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெய் தனுஷ் விவசாயத் தோட்டத்தில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, எதிா்பாராதவிதமாக ஜெய்தனுஷை கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.

பெற்றோா் அவரை மீட்டு முதலில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ஜெய் தனுஷ் உயிரிழந்தாா்.

புகாரின்பேரில், சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments