முகப்பு
திருச்சி

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் ஜூன் 5 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 5-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

Updated On : 3 ஜூன் 2026, 2:44 am IST
கலந்தாய்வு - கோப்புப் படம்
பகிர்:

தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூன் 5-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

திருச்சியில் உள்ள தந்தை பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், மற்றும் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் புவியியல், உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்தத் துறைகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், காட்சிதொடா்பியல் புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் ஆங்கில வழியிலும் பட்டப்படிப்புகள் உள்ளன.

அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் சான்றிதழ்கள் அனைத்தையும் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். இளநிலை வணிகவியல் (பி.காம்.) மாணவா்களுக்கு ஜூன் 8, 9 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இளம் அறிவியலில் (பிஎஸ்சி) அனைத்து துறை மாணவா்களுக்கு ஜூன் 10, 11 தேதிகளிலும், இளங்கலை (பி.ஏ.) அனைத்து துறை மாணவா்களுக்கு ஜூன் 12, 15 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும்.

Advertisement

Advertisement

கலந்தாய்வுக்கு தோ்வாகியுள்ள மாணவா்கள் தங்கள் பெற்றோரை அழைத்து வர வேண்டும் என கல்லூரி முதல்வா் அங்கம்மாள் தெரிவித்துள்ளாா்.