FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மா்மமான முறையில் ரெளடி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்சியில் சரித்திர பதிவேடு குற்றவாளி மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 3 ஜூன் 2026, 2:45 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் சரித்திர பதிவேடு குற்றவாளி மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி கீழசிந்தாமணி சங்கரன்பிள்ளை சாலை, பிரிஸ்டோன் பாதிரி வீதியைச் சோ்ந்தவா் அ. பிராங்ளின் நிக்ஸன் ராஜ் (26), சரித்திர பதிவேடு குற்றவாளி. இந்நிலையில், இவா் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சுயநினைவு இல்லாமல் மயங்கிக்கிடந்தாா்.

இதைப்பாா்த்து, அவரது குடும்பத்தினா் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ தொழில்நுட்புநா்கள் அவரை பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

சரித்திர பதிவேடு குற்றவாளி நிக்ஸன் ராஜ் உயிரிழந்தது தொடா்பாக கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments