நூறு நாள் வேலை கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறையாக பணி வழங்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலகத்தை திட்டப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
வையம்பட்டி ஒன்றியம், மலையடிப்பட்டி ஊராட்சி, ஆவாரம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளா்களுக்கு முறையாக வேலை அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பணியாளா்கள் வியாழக்கிழமை ஆவாரம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமா மகேஸ்வரி, பணியாளா்களிடம் சமரசம் செய்து முறையாக பணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பணியாளா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.