பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டவா் கைது
ஸ்ரீரங்கத்தை சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கத்தை சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் ராயா் தோப்பு பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (25) பதிவிட்டிருந்தாா்.
இதுகுறித்து அந்தப் பெண் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
தமிழரசன் மீது ஏற்கெனவே 2024-இல் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.