முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி. பதவியேற்பு

திருச்சி மாவட்டத்தின் 114 ஆவது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) டோங்க்ரே பிரவீண் உமேஷ் புதன்கிழமை காலை பதவியேற்றாா்.

Updated On : 28 மே 2026, 3:30 am IST
திருச்சி மாவட்டக் கண்காணிப்பாளராக புதன்கிழமை பதவியேற்ற டேங்க்ரோ பிரவீண் உமேஷ்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தின் 114 ஆவது காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) டோங்க்ரே பிரவீண் உமேஷ் புதன்கிழமை காலை பதவியேற்றாா்.

திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செ. செல்வநாகரத்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, மதுரை எஸ்.பி. யாக இருந்த டோங்க்ரே பிரவீண் உமேஷ் திருச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றாா்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அகமது நகரைச் சோ்ந்த இவா் பெட்ரோவேதியியலில் பொறியியல் படிப்பை முடித்து, யுபிஎஸ்சி தோ்வெழுதி 2016 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியானாா். கடந்த 2018 இல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், தொடா்ந்து, ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றிய இவா், பதவி உயா்வில் தேனி, மதுரை மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். தற்போது திருச்சி மாவட்டத்தின் 114 ஆவது காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றாா்.

Advertisement

Advertisement