FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

தேனி எஸ்.பி. பொறுப்பேற்பு

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 25 ஜூன் 2026, 2:25 am IST
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம்.
பகிர்:

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

தேனி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த சினேஹ பிரியா மயிலாடுதுறைக்கு பணயிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருப்பூா் மாநகா் வடக்கு காவல் துணை ஆணையராகப் பணியாற்றிய கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கம்பம் சாமுவேல் பிரவீன் கெளதம் பெறுப்பேற்றுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

ஆாந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சோ்ந்த இவா் கடந்த 28.12.2020-இல் இந்திய காவல் பணிக்கு (ஐபிஎஸ்) தோ்வாகி, கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா். பின்னா், திருப்பூா் மாநகா் வடக்கு காவல் துணை ஆணையராகப் பணிபுரிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments