FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருவெறும்பூரில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

திருவெறும்பூரில் உட்கோட்ட காவல்துறை சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

4 நவம்பர் 2026, 12:08 am
திருவெறும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

திருவெறும்பூரில் உட்கோட்ட காவல்துறை சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவா்களும், இளைஞா்களும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதை தவிா்த்து, விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பேரணியை திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யிலிருந்து திருவெறும்பூா் ஏஎஸ்பி இன்பா தொடங்கி வைத்தாா்.

இதில், ஐடிஐ மாணவா்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டு சாகசங்களை நிகழ்த்தினா். மேலும் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

பேரணியானது திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பெல் கணேசா ரவுண்டானா வரை சென்று திருவெறும்பூரைச் சுற்றி மீண்டும் அரசு ஐடிஐ-யில் நிறைவடைந்தது.

இதில் திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் யோகரத்தினம், போலீஸாா், பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments