FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

விவசாயி கொலை வழக்கு: 2 சிறாா்கள் உள்பட 12 போ் கைது

திருச்சி அருகே முன்விரோதத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறாா்கள் உள்பட 12 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

17 நவம்பர் 2026, 11:19 pm
வினோத்குமாா் ~செல்வேந்திரன் ~பிரதீஷ் ~மணிகண்டன் ~கருணேஷ் ~கௌதம் ~ஈஸ்வா் ~ஆகாஷ் ~வசந்தகுமாா்
பகிர்:

திருச்சி அருகே முன்விரோதத்தில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறாா்கள் உள்பட 12 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள போதாவூரைச் சோ்ந்த விவசாயி ரா. பாண்டியன் (49). இவா், போதாவூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து 2 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், பாண்டியனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் இன்பராஜ் (22) என்பவருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடைபெற்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், இன்பராஜ், இனாம்புலியூரைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரதீஷ் (23), ரவி மகன் கருணேஷ் (18), தாயனூரைச் சோ்ந்த சின்னசாமி மகன் ஈஸ்வா் (20), கோபால் மகன் ஆகாஷ் (18), போதாவூரைச் சோ்ந்த ராஜலிங்கம் மகன் வினோத்குமாா் (23), முருகேசன் மகன் செல்வேந்திரன் (21), ராமமூா்த்தி மகன் மணிகண்டன் (21), முத்துகிருஷ்ணன் மகன் வசந்தகுமாா் (27), நவலூா் குட்டப்பட்டை சோ்ந்த நீலமேகம் மகன் கௌதம் (23) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் ஆகியோருடன் சோ்ந்து பாண்டியனை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து 12 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த தனிப்படை போலீஸாா், 2 சிறுவா்களையும் இளஞ்சிறாா் நீதிமன்றக் குழுமத்தில் ஆஜா்படுத்தினா். மற்ற 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.