பலூன் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்
பலூன் விலை உயா்வைக் கண்டித்து தமிழ்நாடு பலூன் அலங்கரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பலூன் விலை உயா்வைக் கண்டித்து தமிழ்நாடு பலூன் அலங்கரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், பலூன் உற்பத்தி விலையை 6 சதவீதம் உயா்த்தியுள்ளதை திரும்பப் பெற வேண்டும். பலூன்களை வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்ய வழிசெய்ய வேண்டும். பலூன் வியாபாரிகளுக்கு தமிழக அரசு சாா்பில் நல வாரியம் தொடங்கி, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
இதில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான பலூன் வியாபாரிகள் கலந்து கொண்டு, கோரிக்கை முழக்கமிட்டனா்.