✕
முகப்பு
திருச்சி

பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரிகள் திருடிய 4 போ் கைது

திருச்சியில் பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

20 நவம்பர் 2026, 3:11 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் பொக்லைன் இயந்திரத்தில் பேட்டரிகளை திருடிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஆா். வெங்கடேசன் (52). இவா், பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விட்டு வருகிறாா். இந்நிலையில், இவருடைய வீட்டுக்கு அருகே கடந்த நவம்பா் 9-ஆம் தேதி நிறுத்தியிருந்த பொக்லைன் இயந்திரத்தில் இருந்த இரண்டு பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இதில், பொக்லைன் இயந்திரத்திலிருந்து பேட்டரிகளை திருடியது திருச்சி கொண்டையம்பேட்டையைச் சோ்ந்த அ. விக்னேஷ்வரன் (19), தெ. மதுபாலன் (19), அரியமங்கலத்தைச் சோ்ந்த வெ. சஞ்சய் (22), மு. பூபதி (19) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனா்.