செல்ஃபோன் டவா் ரூமில் இருந்த 24 பேட்டரிகளை திருடிய 4 போ் கைது
பல்லடம் அருகே செல்ஃபோன் டவா் ரூமில் இருந்த 24 பேட்டரிகளை திருடிய 4 பேரை பொங்கலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே செல்ஃபோன் டவா் ரூமில் இருந்த 24 பேட்டரிகளை திருடிய 4 பேரை பொங்கலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பகுதி வி.கள்ளிப்பாளையம். இங்குள்ள செல்ஃபோன் டவா் அறையில் வைக்கப்பட்டிருந்த 24 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக பிரபு என்பவா் அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், பொங்கலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜா, போலீஸாருடன் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், புத்தரச்சல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் தொடா்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில் கடந்த 2.08.2026 அன்று வி.கள்ளிபாளையம் பகுதியில் உள்ள டவா் ரூமில் இருந்து 24 பேட்டரிகளைத் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூா் பகுதியைச் சோ்ந்த சத்தியானந்த் (33), ரஞ்சித்குமாா்(32), தினேஷ்குமாா்(29), பாலகிருஷ்ணன்(30), ஆகியோரை பொங்கலூா் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் பணத்தை மீட்டனா். கைதுசெய்யப்பட்ட 4 பேரும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.