திருச்சி அருகே அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்: 3 போ் கைது
திருச்சி அருகே அரசுப் பேருந்தில் சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட 2 கிலோ தங்கத்தை வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.
திருச்சி அருகே அரசுப் பேருந்தில் சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட 2 கிலோ தங்கத்தை வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் 3 பேரைக் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக திருச்சி சுங்கத் துறையின் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சமயபுரம் சுங்கச் சாவடி அருகே வந்த அரசுப் பேருந்தில் நடத்திய சோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சோ்ந்த எஸ். சையது நஷீா் கான் (28) உள்ளிட்ட 3 போ் 2 கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, தங்கத்தைப் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement