முகப்பு

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல், 3 பேர் கைது

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது குறித்து...

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல், 3 பேர் கைது
திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல், 3 பேர் கைது - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி: திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக திருச்சி சுங்கத் துறையின் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சமயபுரம் சுங்கச் சாவடி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சோ்ந்த எஸ். சையது நஷீா் கான் (28) உள்ளிட்ட 3 போ் தங்கத்தை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினா் அவா்களிடமிருந்து 2 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 kg of gold, being smuggled by car, seized near Trichy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.