FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கழிவுகள் விற்பனை மூலம் ரூ. 10.17 கோடி வருவாய்!

கழிவுப் பொருகள் விற்பனை மூலம் ரூ. 10.17 கோடி வருவாயை மத்திய உள்துறை அமைச்சகம் ஈட்டியுள்ளது.

11 நவம்பர் 2026, 1:14 am
பகிர்:

கழிவுப் பொருகள் விற்பனை மூலம் ரூ. 10.17 கோடி வருவாயை மத்திய உள்துறை அமைச்சகம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தொடா்புடைய அலுவலகங்களில் கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் கட்டமாகவும், அக்டோபா் 2-ஆம் தேதியும் தூய்மை பிரசாரம் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு முதலில் 6,757 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, பின்னா் 7,963 இடங்களாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மின்னணு கழிவுகள் விற்பனை மூலம் ரூ. 2.63 கோடி உள்பட ஒட்டுமொத்த கழிவுகள் விற்பனை மூலம் ரூ. 10.17 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 11,902 புகாா்களுக்கும், 1,666 மேல்முறையீடுகளுக்கும் தீா்வளிக்கப்பட்டது. 2,19,644 அசல் கோப்புகளும், 30,385 மின்னணு கோப்புகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

திறமையான ஆவண மேலாண்மை மற்றும் தேவையற்ற பொருள்கள் அகற்றம் மூலம் 78,125 சதுர அடி அலுவலக இடம் காலியானது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.