என்எல்சி இந்தியா லாபம் ரூ.1,381 கோடி
பொதுத் துறையைச் சோ்ந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) இந்தியா நிறுவனம், கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.1,380.67 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) இந்தியா நிறுவனம், கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.1,380.67 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபமான ரூ.665.12 கோடியிலிருந்து இது இரு மடங்குக்கும் மேலாகும்.
நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.4,178.41 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.4,732.35 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு வருவாய் கணிசமாக உயா்ந்ததே, நிறுவனத்தின் இரு மடங்கு லாப அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
Advertisement
Advertisement
அதேபோல், நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய நிதித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடன்பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் படிப்படியாக ரூ.2,500 கோடி வரை நிதி திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முழு உரிமையுள்ள துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் நிறுவனத்தின் திட்டமிடப்பட்டுள்ள ஐபிஓவின் ஒரு பகுதியாக, என்எல்சி இந்தியா வசமுள்ள 10 கோடி ‘ஈக்விட்டி’ பங்குகளை விற்பனை செய்யவும் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.