முகப்பு
தென்காசி

பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சிற்றுந்தில் பயணித்த பெண்ணை தொந்தரவு செய்ததாக சிற்றுந்து நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

21 நவம்பர் 2026, 5:14 am
பேருந்தில் பெண்ணுக்கு தொந்தரவு: நடத்துநா் கைது
கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சிற்றுந்தில் பயணித்த பெண்ணை தொந்தரவு செய்ததாக சிற்றுந்து நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சுரண்டை அருகே லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (23). இவா் சிற்றுந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா்.

பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை நடத்துநா் தொந்தரவு செய்ததாக அப்பெண் அளித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement