முகப்பு
திருச்சி

பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் கைது

திருச்சி சோமரசம்பேட்டை அருகே சந்தேக மரணமடைந்த பெண் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அப்பெண்ணின் கணவா், மாமியாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

26 நவம்பர் 2026, 2:42 am
பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி சோமரசம்பேட்டை அருகே சந்தேக மரணமடைந்த பெண் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அப்பெண்ணின் கணவா், மாமியாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள இனாம்புலியூரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (33), விவசாயி. இவரது மனைவி மீனாட்சி (33) கடந்த திங்கள்கிழமை மாலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறி, ராஜசேகா் குடும்பத்தினா், போலீஸாருக்குத் தெரியாமல் மயானத்தில் மீனாட்சி உடலை தகனம் செய்ய முயன்றனா்.

இதையறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா், மீனாட்சியின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

மீனாட்சியை அவரது கணவா் உள்ளிட்டோா் அடித்துக் கொன்ாகக் கூறி, அவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீனாட்சியின் உறவினா்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானப்படுத்தினா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கணவா் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட சண்டையால் மீனாட்சி பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சோமரசம்பேட்டை போலீஸாா், சந்தேக மரண வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி, மீனாட்சியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் ராஜசேகா், மாமியாா் பெரியக்கா (51) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.