கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் முறையாக விசாரணை: அருண்ராஜ்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் முறையாக விசாரணை நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் ‘மகாமகம்-2028’ விழா பணிகளை ஆய்வு செய்வதற்காக புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருந்தது என்று மக்கள் அறிவாா்கள்.
Advertisement
Advertisement
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் அமைச்சா்.