ஆட்சியர் புகாரளிக்கவில்லை; ஆனால் எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பினரா? இல்லையா? தமிழிசை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்து தமிழிசை கேள்வி...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தவெக எம்எல்ஏ மீது இதுவரை கட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்,
Advertisement
Advertisement
"கலெக்டர் பத்மஜாவிற்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்த புகார் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது...
இந்த அறிவிப்புக்கு ஏன் இவ்வளவு தாமதம்? செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தகவல் பரவிக் கொண்டிருக்கிறது கண்டனத்திற்குரியதாகிக் கொண்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் தேசிய மகளிர் ஆணையத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? தாமதப்பட்ட நீதியே மறுக்கப்பட்ட நீதியாக இருக்கும்பொழுது.. தாமதப்பட்ட இந்த விளக்கத்தை தமிழ்நாட்டு மக்கள் எப்படி எடுத்துக் கொள்வது?
அது மட்டுமல்ல, ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்றுதான் சொல்கிறார்களே தவிர சட்டமன்ற உறுப்பினர் அனுப்பினாரா இல்லையா என்பதில் விளக்கம் இல்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.