FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி! சந்தேகம் வலுக்கிறது: அண்ணாமலை

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சந்தேகம் வலுப்பதாக அண்ணாமலை கூறியது குறித்து...

அண்ணாமலை - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் வாய்ப்பிருப்பதாக சந்தேகம் வலுப்பதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசியதாவது, "ஒரு மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக ஒரு பெண் இருப்பதே பெரிய பெருமை. மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஏதேனும் பிரச்னை ஏற்படுத்தியிருந்தால், முதல்வர் தானாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஆனால் முதல்வர் எச்சரித்தார், புஸ்ஸி ஆனந்த் வீட்டில் சில எம்எல்ஏ-க்கள் பார்த்தனர் என செய்தி ஊடகங்களில் மட்டும் போடுகின்றனர். எனக்கு சந்தேகம் வலுத்துக்கொண்டே இருக்கிறது.

மாநிலத்தின் தலைவராக முதல்வர் இருக்கும்நிலையில், அவருடைய கட்சி எம்எல்ஏ சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விவகாரத்தில் முதல்வர் தானாகவே பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியருக்கு அந்த எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா இல்லையா என்ற கேள்விக்கு அனுப்பினார் என்றால் நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில், எம்எல்ஏ குறுஞ்செய்தி எதுவும் அனுப்பவில்லை என நீங்களே (முதல்வர்) சொல்லுங்கள்.

எல்லாவற்றை மூடி மறைக்க மறைக்க அரசின் மீது நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில் உண்மையைச் சொன்னால்கூட அரசை யாரும் நம்ப மாட்டார்கள்.

குறுஞ்செய்தி அனுப்பினால் என்ன என காங்கிரஸ் தலைவர் கேட்கிறார். உண்மையாகவே குறுஞ்செய்தி அனுப்பியதற்கு வாய்ப்பு இருக்கிறதோ என எனக்கு சந்தேகம் வலுக்கிறது" என்று தெரிவித்தார்.

summary

Suspicion arises regarding the alleged incident of an obscene text message being sent to the District Collector, says Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.