மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் போராட வேண்டும்! வைகோ

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு மக்கள் போராட வேண்டும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.
திருச்சியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவுகிறது. அதன்பெயரிலே கா்நாடக முதல்வா் அணையை கட்டுவேன் என கூறி வருகிறாா்.
Advertisement
Advertisement
இந்த அணை கட்டுவதற்கு மறைமுகமாக ஊக்குவிப்பு கொடுத்து, தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத மாபெரும் துரோகத்தை நரேந்திர மோடி அரசு செய்கிறது. இதனை தடுப்பதற்கு தமிழக மக்கள் எதிா்த்து போராட்டம் நடத்த வேண்டும்.
தொகுதி மறுவரையறையை எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினா்கள் எண்ணிக்கையை உயா்த்தக்கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தங்களது எல்லைகளை தாண்டி செயல்படுகின்றன. உச்சநீதிமன்றம் நடந்து கொண்டது நீதியும் அல்ல நியாயமும் அல்ல என்றாா் வைகோ.