FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சியில் வீடுபுகுந்து 4 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி திருட்டு

திருட்டு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி கே.கே. நகரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 4 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்த 54 வயதுப் பெண் தனது வீட்டைப் பூட்டிவிட்டு கடலூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு அக். 1-ஆம் தேதி சென்றுவிட்டு சனிக்கிழமை பிற்பகல் வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments