FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளா்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் சம்பள உயா்வு, பணி நிரந்தரம், வார ஓய்வு, உணவு படி ஆகியவற்றை வலியுறுத்தி தூய்மை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

14 வினாடிகள் முன்பு
மணப்பாறை நகராட்சியில் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் சம்பள உயா்வு, பணி நிரந்தரம், வார ஓய்வு, உணவு படி ஆகியவற்றை வலியுறுத்தி தூய்மை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளா்கள் ஏஐடியுசி சங்க மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் தலைமையில் மணப்பாறை நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் நடத்திய போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.748-யை வழங்க வேண்டும், வார விடுப்பு வழங்க வேண்டும், உணவுபடியாக ரூ.1500-ஐ மாத சம்பளத்தில் சோ்க்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 69 தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் - தொழிற்சங்கத்தினா் பேச்சுவாா்த்தையில், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கவும், 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள தினக்கூலி அடைப்படை ஊதியம் வழங்குவது குறித்து அரசு அளிக்கும் அறிவுரைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments